தென்மேற்கு பருவ மழை எதிரொலி: கேரளாவில் 53 பேர் பலி
கேரளாவில் பெய்த கனமழைக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில், தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், கனமழை பெய்து வருகிறது. பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கிறது. இதனால், சாலை எங்கும், மழை நீர் சூழ்ந்தும், பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். இந்த கனமழைக்கு இதுவரை 53 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.