எடை கூடினாலும் குறைந்தாலும் தப்புதான்!- விளக்கும் நஸ்ரியா

'கூடே’ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் மீண்டும் வெளித்திரைக்கு வந்துள்ளார் நஸ்ரியா.

நடிகை நஸ்ரியா சினிமா துறையில் அறிமுகமான சில ஆண்டுகளிலிலேயே தனது அழுத்தமான நடிப்பின் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்தவர். சிறந்த நடிகையாக வலம் வந்தவர் கடந்த 2014-ம் ஆண்டு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் சினிமாக்களில் நடிப்பதை அறவே தவிர்த்துவிட்டார் நஸ்ரியா. தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடிப்பு உலகில் சிறந்த நாயகியாக வலம் வர களம் இறங்கியுள்ளார்.

கூடே என்ற மலையாளத் திரைப்படத்தில் விரைவில் ரசிகர்களுக்காக வருகிறார் நஸ்ரியா. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் பிரித்விராஜ், பார்வதி மேனன் ஆகியோர் உடன் நஸ்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதுகுறித்து நஸ்ரியா கூறுகையில், “இத்திரைப்படத்தில் நடிகர் பிரித்விராஜின் தங்கையாக நடிக்கிறேன். கூடே திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்குப் பின்னர் நான் இடம்பெற்ற பாடல் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்த பின்னர் பலரும் ஏன் எடை கூடிவிட்டீர்கள் எனக் கேட்கிறார்கள். குறைந்தாலும் இதையேத் தான் கேட்பார்கள். 

சினிமாவிலிருந்து எடுத்துக்கொண்ட இடைவெளி மிகவும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. எனக்காக என் கணவர் ஃபகத் பாசிலும் ஓராண்டு சினிமாவிலிருந்து இடைவெளி எடுத்தார். தற்போது எனக்கானக் கதையை அஞ்சலி மேனன் கொண்டு வந்திருக்கிறார். அதனால் மீண்டும் திரைக்கு வந்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

 

More News >>