ஸ்டாலினால் தான் தமிழகத்துக்கு ஆபத்து- அமைச்சர் ஜெயக்குமார்
”ஸ்டாலினால் தான் தமிழகத்துக்கு ஆபத்து” என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தற்போதிய தமிழகத்தின் நிலை என எடுத்துக் கூறிய போது, “அதிமுக-வால் தமிழகத்துக்கு ஆபத்து" எனக் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு ஆபத்து, அதிமுக ஆட்சியில் யாருக்கும் ஆபத்து இல்லை; எல்லோருக்கும் பரிபூரண சுதந்திரம் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மன்சூர் அலிகான் விவகாரத்தைப் பொறுத்தவரையில் அவர் பேசியது வன்முறையான பேச்சு எனவேதான் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.