சூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ் உருளைக்கிழங்கு வடை ரெசிபி
சூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ் உருளைக்கிழங்கு வடை ரெசிபி எப்படி செய்றதுனு பார்ப்போம்..
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – அரை கிலோ (வேகவைத்து, தோல் நீக்கி, மசித்து கொள்ளவும்)
கடலை மாவு – நான்கு டீஸ்பூன்
இஞ்சி – அரை துண்டு
சீரகம் – ஒன்றை டீஸ்பூன்
கொதம்மல்லி – சிறிதளவு
மிளகாய் தூள் – ஒன்றை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
இஞ்சி மற்றும் சீரகம் இரண்டையும் அரைத்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, உப்பு, கொதம்மல்லி இலை, கடலை மாவு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.