தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் பிரச்னையே இல்லை!- தேவ கெளடா
”தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதில் எந்தப் பிரச்னையும் இல்லை” என முன்னாள் பிரதமர் தேவ கெளடா தெரிவித்துள்ளார்.
"காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை" என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். இதையடுத்து நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் ஆணையத்திற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர்ரும் மஜக-வின் மூத்தத் தலைவருமான தேவ கெளடா கூறுகையில், “தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை தமிழகத்திற்கு 177 டிஎம்சி நீர் வழங்குவதை கர்நாடக தடை செய்யாது ஜூன் மாதத்தில் நடுவர் மன்றம் குறிப்பிட்டதைவிட அதிகப்படியான நீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.