இந்தியாவின் சொகுசு ஸ்போர்ட்ஸ் அமைப்பு கார் விரும்பிகளுக்கு!
மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ் 63 கூபே சொகுசு கார் இன்று இந்திய சந்தைகளில் களம் இறங்குகிறது. டெல்லியில் ஷோரும்களில் 2.55 கோடி ரூபாய்க்கு இக்கார் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ் 63 கூபே கார் சொகுசு பட்டியலில் தான் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ் 63 என்ற கூபே வகை கார் தான் அறிமுகம் ஆகியுள்ளது. ஆனால், சர்வதேச அளவில் ஏஎம்ஜி எஸ் 63 கேப்ரியோலட் வகை கார்கள் விற்பனைக்கு உள்ளது. ஆனால், விரைவில் இந்தியாவிலும் கேப்ரியோலட் வகை கார்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்போர்ட்ஸ் வகை இருக்கைகள் உடன் காரின் ஷ்பெஷல் அம்சங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதாகவே உள்ளன. ஸ்டியரிங், முன் பக்கவாடு அமைப்பு, கதவு அமைப்பு, கைபிடிகள், காலடிகள் என அனைத்தும் ஒரு ஸ்போர்ட்ஸ் காரின் அம்சங்களைக் கொண்டே விளங்குகின்றன.
இரட்டை டர்போக்கள் உடன் வி8 வகை புது ரக என்ஜின் பொருத்தப்பட்டு 5.5 லிட்டர் என்ஜின் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. டார்க் அளவீடு 900 என்.எம் ஆக உள்ளது. மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் இந்த மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ் 63 கூபே. மேலும் 100 கிமீ வேகத்தை வெறும் 3.5 விநாடிகளில் கடந்துவிடும் ஆற்றல் கொண்டது தான் மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ் 63 கூபே.