டெல்லியில் இருதரப்பினருக்குள் துப்பாக்கிச் சண்டை! மூவர் பலி!
டெல்லியில் பட்டப் பகலில் இரு கும்பலுக்கு இடையில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு டெல்லியில் இருக்கும் புராரி பகுதியில் கோகி குழு மற்றும் தில்லு குழு ஆகியோருக்கு இடையில் தான் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. மேற்குறிபிட்டுள்ள இரண்டு குழுக்களில் ஒரு குழுவைச் சேர்ந்த நபர் அங்கிருக்கும் ஜிம் ஒன்றில் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வருகிறார்.
அப்போது எதிர்தரப்பினர் அவர் மீதும் அவரின் குழு மீதும் துப்பாக்கிசூடு நடத்துகின்றனர். இதையடுத்து, இரண்டு குழுக்களும் தங்களது கார்களிலிருந்து சரமாரியாக சுட்டுக் கொல்கின்றனர். இதனால், அங்கு சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழக்க நேரிடுகிறது.
தொடர்ந்த துப்பாக்கி சூடு நடந்துகொண்டே இருக்கிறது. இதனால், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட குழுக்களில் இருந்தும் இருவர் பலியாகின்றனர். ஒரு குழு ஃபார்ச்சூனர் வண்டியிலிருந்து துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். ஸ்கார்பியோ உள்ளே இருந்து இன்னொரு குழு துப்பாக்கி சூடு நடத்துகிறது.
இதில் ஸ்கார்பியோ கார் சம்பவ இடத்திலிருந்து உடனடியாக தப்பிச் செல்கின்றது. இந்த அனைத்துக் காட்சிகளுக்கும் அருகில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறது போலீஸ். இந்த இரண்டு குழுக்களும் இதைப் போன்ற சம்பவங்களில் முன்னரும் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.