எய்ம்ஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின!
2018 ஆம் ஆண்டுக்கான எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.
இந்த முடிவுகள் எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ்-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகும். இந்தத் தேர்வை எழுதிய மாணவர்கள், எய்ம்ஸ் இணையதளத்தில் சென்று முடிவை தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான எய்ம்ஸ் தேர்வு மே மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடந்தன.
இன்று தேர்வு முடிவுகள் வெளியானதால் வரும் ஜூலை மாதம் கவுன்சிலிங் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் இணையதளத்துக்குச் சென்று கேட்கப்படும் தகவல்களை கொடுக்கவும்.
தகவல்களை பூர்த்தி செய்த பின்னர் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். 2018 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மற்றும் ஜிப்மர் எம்.பி.பி.எஸ் தேர்வுக்கான முடிவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.