கெஜ்ரிவால் போராட்டம்: அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
புது டெல்லியின் ஆளுநர் அனில் பைஜல் அலுவலகத்தில் கடந்த செவ்வாய் கிழமை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரின் சட்டமன்ற அமைச்சர்கள்.
இதில், டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திரா ஜெயின் ஆகியோர், புதன் கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சத்யேந்திராவின் உடல்நிலை நேற்று மோசமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார். கெஜ்ரிவாலின் இந்தப் போராட்டத்துக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், சிதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல எதிர்க்கட்யினர் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திராவின் உடல்நிலை மோசமான நிலையை அடைந்தது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கெஜ்ரிவால், 'நேற்றிரவு சத்யேந்திராவுக்கு சிறுநீர் கழிப்பதிலும் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. எனவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது அவரின் உடல்நிலை தேறியுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.