செக்குடியரசில் பொழுது போக்கு போர்...
பழங்கால ராணுவ வீரர்களை போல உடையணிந்து, ஆயுதங்களால் மோதிக்கொள்ளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி செக்குடியரசில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுள் ஒன்றான செக்குடியரசின் தலைநகர் பிராகாவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலையில் டாக்ஸி வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் ஆண்டுதோறும் பொழுதுபோக்கு சண்டை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டும் சண்டை நிகழ்ச்சி நடந்தது. பழங்கால போர் வீரர்களைப் போல் பங்கேற்பாளர்கள் உடை அணிந்து வந்தனர். ஈட்டி, வாள் மற்றும் அம்புகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஏந்தி போர் செய்தனர். யாருக்கும் அடிபடாத வகையில் பாதுகாப்பு கவசங்களை கையில் வைத்துக் கொண்டு சண்டையிட்டனர். பிரபல எழுத்தாளரான ஜே.ஆர்.ஆர். டால்கீன் "ஹோபிட்" புத்தகங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் இந்த சண்டையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.