ரஜினிக்கு கமல் வாழ்த்து

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  பிறந்த நாள் ஸ்பெஷலாக  `காலா' படத்தின் இரண்டாவது போஸ்டரை தனுஷ்  வெளியிட்டார். ரஜினி பிறந்தநாளுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும், மு.க.ஸ்டாலின், தமிழிசை, திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். அதேநேரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். ரஜினி வீட்டிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், ரசிகர்கள் சாலையிலேயே கேக் வெட்டி ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாடினர். இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து கூறினார். ‘சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக அமெரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
More News >>