சென்னை ஐசிஎப்பில் புதிய சிபிஎஸ்இ பள்ளி திறப்பு

சென்னை ஐசிஎப் வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிபிஎஸ்இ பள்ளி நேற்று திறக்கப்பட்டது.

சென்னை ஐசிஎப் வளாகத்தில், மத்திய அரசின் புதிய சிபிஎஸ்இ பள்ளி நேற்று திறக்கப்பட்டது. இதனை ஐசிஎப் உயர் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். இந்த பள்ளியில் நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட உள்ள இந்த பள்ளியில் தற்போது, 278 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தற்போது, இங்கு 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை உள்ளது. விரைவில், இந்த பள்ளியில் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையில், ஐசிஎப்பில் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதன் பிறகு, மற்ற ரயில்வே ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பள்ளியில், பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நீட், ஜே.இ.இ போன்ற நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>