கொடியேற்றத்துடன் தொடங்கியது நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா!
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடி ஏற்றம் இன்று நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில்.
உலக பிரசித்தி பெற்றது இந்த கோயிலில் நடைபெறும் தேரோட்டம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆனி திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.