காஷ்மீர் கூட்டணி ஆட்சியில் விரிசல்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மெகபூபா முப்தி

காஷ்மீர் மாநிலத்தின் கூட்டணி அரசியலில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக இன்று முதல் பதவியில் இருந்து மெகபூபா முப்தி ராஜினாமா செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும் பாஜக 25 இடங்களையும் பிடித்தது. ஆனால், இங்கு யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்காததால், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பாஜக ஆதரவுடன் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் ஆட்சி அமைத்தது. இதன் பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல்வராகவும், பாஜக தரப்பில் நிர்மல் சிங் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

ஆட்சி காலத்தின்போதே முப்தி முகம்மது சயீத் மறைந்துவிட்டார். இதனால், அவரது மகள் மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி & பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இதைதொடர்ந்து, ஆளும் கட்சிக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் டெல்லி வரும்படி பாஜக தலைவர் அழைப்பு விடுத்தார். இதனால், இன்று எம்எல்ஏக்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பாஜக இன்று அறிவித்தது.

இதனால், பெரும்பான்மையை இழந்த ஆளும் கட்சியினால், மெகபூபா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் என்.என்.வோராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்த முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

More News >>