நடிகை கல்பனாவின் மகள் ஹீரோயினாக அறிமுகமாகிறார்

மறைந்த நடிகை கல்பனாவின் மகள் மலையாள படம் ஒன்றின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

 

நடிகை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான மறைந்த கல்பனாவின் மகள் ஸ்ரீமயி  நடிக்க வந்துள்ளார். அவர் சுமேஷ் லால் இயக்கும் குஞ்சி அம்மையும் அஞ்சு மக்களும் மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்க உள்ளது.

கலாபவன் சஜோன், டாம், ஸ்ரீஜித் ரவி, பினு பப்பு, இர்ஷாத் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். அப்ரா பிலிம்ஸ் குஞ்சி அம்மையும் அஞ்சு மக்களும் படத்தை தயாரிக்கிறது.

More News >>