நாகேஷின் பேரன் அறிமுகமாகும் ஸ்கூல் கேம்பஸ்-சந்தோஷத்தில் ஆனந்த் பாபு
நாகேஷின் குடும்ப வாரிசு கஜேஷ் நாகேஷ் (ஆனந்த்பாபு மகன்) அறிமுகமாகும் திரைப்படம் "ஸ்கூல் கேம்பஸ்". இப்படத்தை தயாரிக்கிறார் ஏ.எம்.என். பைன் ஆர்ட்ஸ் சார்பாக டாக்டர்.ஆர்.ஜெ.ராம நாராயனா. படத்தின் இயக்குனரும் இவரே. மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.ஜெ.ராம நாராயனா நடித்துவருகிறார்.
டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் முதல் நாள் படப்பிடிப்பை துவக்கி வைத்தார் ஸ்ரீ சந்தோஷ் குமார் ஐ.ஏ.எஸ். இந்தியாவில் கல்வி மற்றும் எதிர்காலத்தில் கல்வியில் மாற்றம் பற்றி சொல்லும் ஒரு கதையாக இது அமைந்துள்ளதாம்.
படத்திற்கு தேவா இசையமைக்க, எஸ்.பி.பி, ஆஷா போஷ்லே, பி.சுசிலா என முன்னணி பாடகர்கள் பாடல் பாடியுள்ளனர். ஸ்கூல் கேம்பஸ் படத்தின் ஹீரோவாக கஜேஷ் நாகேஷ், ராஜ்கமல் ஆகியோரும், நாயகிகளாக கீர்த்தி மற்றும் காயத்ரி நடித்துவருகிறார்கள்.
இவர்களுடன், டெல்லி கணேஷ், மதன் பாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். படத்தினை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யதிட்டமிட்டுள்ளனர்.