அமெரிக்காவின் வால்மார்ட் அருகே இப்படி ஓர் கீழ்த்தரமான சம்பவமா?
அமெரிக்காவில் தந்தையின் கண்முன்னே எட்டு வயது சிறுமிக்கு ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
வாஷிங்டன், ஷெல்டன் நகர் வால்மார்ட்டில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தன்னுடைய இரண்டு மகள்களுடன் தான் நின்றிருந்தபோது, எங்கிருந்தோ வந்த ஒரு நபர், எதிர்பாராமல் தன் மகளை பின்பக்கமிருந்து அணைத்துப் பிடித்து தரையில் தள்ளியதாக தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கிறது என்று நிதானித்து, தான் அவனை தள்ளிவிடுவதற்குள், சிறுமியின் கீழாடைகளை அவன் அகற்றியதாகவும் வானொலி நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
தன்னைவிட உருவத்தில் பெரிய அந்த நபரை தான் முயற்சித்து தள்ளியபோது, அவன் அசிங்கமான பாலியல் சமிக்ஞையை செய்துவிட்டு சென்றதாகவும் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.