ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு சம்மன்!
வெளிநாட்டு சொத்துக்கள், முதலீடுகளை மறைத்ததாக வருமான வரித் துறை தாக்கல் செய்த வழக்கில், வரும் 25-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் சொத்துக்கள், அமெரிக்காவில் முதலீடுகளை மறைத்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமானவரித் துறை, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் புகார் மனுவைத் தாக்கல் செய்தது.
இந்த புகார் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி மலர்விழி, குற்றம்சாட்டப்பட்ட நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோரை வரும் 25-ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.