மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற தமிழச்சி!
தமிழகத்தை சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.
2018-ஆம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா போட்டி, மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்தது. அனுகீர்த்தி வாஸ் உள்பட 30 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். பல போட்டிகளுக்கு பின்னர் மிஸ் இந்தியாவாக அனுகீர்த்தி வாஸ் தேர்வு செய்யப்பட்டார்.2-ஆவது இடத்தை ஹரியானாவின் மீனாட்சி சௌத்ரியும், 3-ஆவது இடத்தை ஆந்திராவை சேர்ந்த ஸ்ரேயா ராவ் காமவரப்பும் பிடித்துள்ளனர்.
உலக அழகி மானுஷி சில்லர், மிஸ் இந்தியா அனுகீர்த்திக்கு மகுடம் சூட்டி கவுரவித்தார். மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற அனுகீர்த்தி வாஸ், 2018ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் பங்கேற்க உள்ளார்.
பாலிவுட் நடிகைகளான மாதுரி தீட்சித், கரீனா கபூர் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் போன்ற சினிமா நட்சத்திரங்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.