நல்ல விலைக்கு போன வேலைக்காரன் கேரளா உரிமை
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் டிசம்பர் 22 ல் வெளியாகவுள்ளது. இதில் மலையாள நடிகர் ஃபாகத் பாசிலும் நடித்துள்ளார்.
இப்படத்தின் கேரளா உரிமையை அதிக தொகைக்கு பிரபல நிறுவனமான E4 எண்டர்டெயின் மெண்ட் வாங்கியுள்ளது. வேலைக்காரன் படத்தை கேரளா முழுக்க வெளியிடுகிறார்களாம்.
இவர்கள் ஏற்கனவே ஃபாகத் ஃபாசில் நடிப்பில் 2 படங்களை தயாரித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு கேரளாவில் சில ரசிகர்கள் வட்டம் இருந்தாலும் நயன்தாரா, ஃபாகத் இருப்பதாலும் இந்த முடிவாம். மேலும் இயக்குனர் தனிஒருவன் ஹிட்கொடுத்துள்ளதால் கேரளாவில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.