தமிழக அரசின் உத்தரவை அடுத்து 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த 47 ஆயுள் தண்டனை கைதிகளை இன்று விடுதலை செய்யப்படுகிறது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தமிழக அரசு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை கைதிகளின் அடிப்படையில் முதற்கட்டமாக கடந்த 6ம் தேதி 67 பேரை விடுதலை செய்ய அறிவித்தது. தொடர்ந்து, கடந்த 12ம் தேதி 52 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுவதாக சிறைத்துறை டிஜஜி முருகேசன் தெரிவித்தார்.