துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பம்: சாக்zwnjஷி தோனி தாக்கல்
தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கு துப்பாக்கி பயன்படுத்தும் உரிமை வேண்டும் என சாக்ஷி தோனி விண்ணப்பித்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ‘தல’ ஆக அழைக்கப்படும் தோனியின் மனைவி சாக்ஷி தோனி துப்பாக்கி லைசென்ஸ் கோரி ராஞ்சி தலைமை காவல் நிலையத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
இதேபோல் கடந்த 2006-ம் ஆண்டு மஹேந்திர சிங் தோனி தனது சொந்த பாதுகாப்புக்காக பிஸ்டல் பயன்படுத்த அனுமதி கோரி ராஞ்சி கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் வாங்கினார்.
அதன் பின்னர் முறையாக கொல்கத்தா துப்பாக்கிச் சுடுதல் களத்தில் பயிற்சி பெற்று அதிலும் சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா போலீஸ் பயிற்சி மையத்தில் புது காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்கும் அளவுக்கு செயலாற்றினார்.
இந்நிலையில் சாக்ஷி தோனி, “என் கணவர் இல்லாமல் நான் அதிக நேரம் குழந்தையுடன் வீட்டில் தனியாகத் தான் இருக்கிறேன். இதனால் எனது பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தல் உள்ளது. இதனால் எனது சுய பாதுகாப்புக்காக துப்பாக்கி உரிமம் அளிக்க வேண்டும்” என ராஞ்சி போலீஸ் நிலையத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.