சபரிமலை பம்பை ஆற்றில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு?
சபரிமலையில் உள்ள பம்பை ஆற்றில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக தேவபிரசன்னத்தில் தெரியவந்துள்ளது.
தந்திரி கண்டரர் மகேஸ் மோகனர் முன்னிலையில் பிரபல ஜோதிடர் இரிங்ஙாலக்குடா பத்மநாப ஷர்மா தலைமையில் 3 நாட்கள் தேவ பிரசன்னம் நடந்தது.
இதில் “பூசாரிகள் தேவசம்போர்டு பாதுகாவலர்கள் மற்றும் போலீசாரின் மோசமான செயல்பாடுகள் மூலம் பல தோஷங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு பரிகாரம் செய்யவேண்டும்போலீசாரும் தேவசம் பாதுகாவலர்களும் பக்தர்களிடம் கடுமையாக நடப்பதை தவிர்க்கவேண்டும். திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சபரிமலை கோயிலுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பம்பை ஆற்றில் அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் அதை தடுக்க சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும்" என்பன போன்ற விஷயங்கள் தேவபிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.