அல்லு அர்ஜுன் சாதனையை முறியடித்த அஜித்..!
இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் தொடர்ந்து நான்காவது முறையாக கூட்டணி வைத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க தயாராகி வருகிறார் அஜித்.
கடந்த, 2017ம் ஆண்டு வெளிவந்த விவேகம், அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். படம் சற்று கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதையெல்லாம் பொருட்படுத்தாத அஜித் மீண்டும் சிவாவுடன் ஒரு படம் நடித்து வருகிறார். விசுவாசம் என பெயர் வைக்கப்பட்ட திரைப்படம் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது.
சரி, இப்பொது விஷயத்திற்கு வருவோம். அஜித் - சிவா இணைந்த 3வது திரைப்படம் விவேகம் தற்போது இந்தியில் மொழிபெயர்ப்பு செய்து இரு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளமான யூ டியூப்பில் வெளியானது. படம் வெளியான முதல் நாளில் மட்டும் சுமார் 8 மில்லியன் ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர்.
ஒரு திரைப்படம் அதுவும் தமிழில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திரைப்படம் இவ்வளவு பார்வையாளரை ஈர்த்துள்ளது ஒரு பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த சர்ரைநடு திரைப்படம் அதிக பட்சமாக 5 மில்லியன் பார்வையாளர் பார்த்தது சாதனையாக இருந்தது.
தற்போது அஜித்தின் விவேகம் திரைப்படம் இந்த சாதனையை சுலபமாக கடந்து தற்போது 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.