ஒல்லியான கும்கி ஹீரோயின்
‘கும்கி’ பட ஹீரோயின் லட்சுமிமேனன் உடல் தோற்றம் பற்றி கவலைப்படாமல் படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் மிகவும் குண்டானார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது. அஜீத் நடித்த வேதாளம் படத்தில் தங்கையாக நடித்தார் லட்சுமிமேனன். இதனால் அவரது ஹீரோயின் இமேஜ் பாதித்தாக கூறப்பட்டது. யங் மங் சங் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
குண்டான உடல் தோற்றத்தை குறைக்க உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி, யோகா என பல முயற்சிகளை மேற்கொண்டார் லட்சுமிமேனன். ஓரளவுக்குத்தான் எடை குறைந்தது. ஒரு கட்டத்தில் உடல் எடையை குறைக்க கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அனமையில் வெளிவந்த ஒரு புகைப்படத்தில் லட்சுமிமேனன் ஒல்லியாக இருக்கிறார்.இது பலரையும் ஆச்சரியத்தில் உரையவைத்தது.