அதிக கோல்களை எடுத்த வீரர்- சாதனை படைத்தார் ரொனால்டோ!

கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த முதல் ஐரோப்பிய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

போர்ச்சுகல் அணியைச் சேர்ந்த ரொனால்டோ சர்வதேச அளவில் கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்கள் அடித்த முதல் ஐரோப்பிய வீரர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார். 2018 ஃபிபா கால்பந்து போட்டிகளில் மொரோக்கோ அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தனது 85-வது கோலைப் பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 1945 முதல் 1956 வரையிலான காலக்கட்டத்தில் ஹங்கேரி அணிக்காக விளையாடிய புஸ்காஸ் என்ற வீரரின் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு அடுத்தாற் போல் சர்வதேச வீரர்களில் ஒருவரான அலி தேய் ரொனால்டோவுக்கு சவலாக உள்ளார்.

அலி தேய் கடந்த 1993- 2006 வரையிலான காலகட்டங்களில் ஈரான் அணிக்காக 109 கோல்கள் அடித்தது சர்வதேச சாதனையாக உள்ளது.

 

More News >>