ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று நேரில் சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை இன்று அவரது இல்லத்திலேயே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “கமல்ஹாசனைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் இருவரும் எங்கள் கட்சி குறித்தும் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்தும் கலந்து ஆலோசித்தோம்” என பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தனது சந்திப்பு குறித்து கூறுகையில், “இது அரசியல் கூட்டணிக்கான சந்திப்பு அல்ல. மரியாதை நிமித்தமாகவே ராகுல் காந்தியைச் சந்தித்தேன். தமிழக அரசியல் மற்றும் சமூக நிலை குறித்தும் கலந்து ஆலோசித்தோம்” என்றுள்ளார்.

முன்னதாக செல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியைப் பதிவு செய்வதற்காக கமல்ஹாசன் அங்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>