பறவையால் தள்ளாடிய ஏர் இந்தியா விமானம்!
டெல்லியில் இருந்து இன்று கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தை பறவை ஒன்று எதிர்பாரத விதமாக தாக்கியது.
இதனால், விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்துக்கே திரும்ப வேண்டிய கதி நேர்ந்தது. ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ 440, என்கின்ற விமானம் இன்று டெல்லி விமான நிலையத்திலிருந்து டேக்-ஆஃப் ஆகி ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது, விமானத்தை எதிர்பாராத விதமாக பறவை ஒன்று தாக்கியுள்ளது. இதையடுத்து, கிளம்பிய நிலையத்துக்கே மீண்டும் திரும்பியது விமானம். இந்த விமானத்தில் 131 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம், ‘விமானத்தில் இருந்த எல்லா பயணிகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர். இந்த எதிர்பாராத சம்பத்தை விமானத்தில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. பயணிகளுக்கு எந்த வித சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காக மற்ற விமானங்கள் மூலம் அவர்களை அனுப்பி வைத்துள்ளோம்’ என்று கூறியுள்ளனர்.