அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றமா? இந்தியர்கள் கைது!
By Rahini A
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர் என்று கூறி 52 இந்தியர்கள் உட்பட 123 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்தியர்களில் பெரும்பான்மையானோர் சீக்கியர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்க தேசம், சீனா, பிரேசில், மெக்சிக்கோ, பெரு, நேபால், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர் என்று கூறி அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் தஞ்சம் கொடுக்கமாறு கேட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு ஓரிகன் மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயக கட்சியினர் நேரில் சென்று பார்த்தனர். அவர்கள், ‘சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபர்கள், அவர்கள் நாட்டில் மதம் சார்ந்தும் மற்றும் பல விஷயங்கள் சார்ந்தும் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் அமெரிக்காவுக்கு வந்துள்ளனர்.
இந்த காரணத்திற்காக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. அகதிகள் விஷயத்தில் ட்ரம்ப் தலைமையிலான அரசு, எந்தவித சமரசமும் இல்லை என்ற கொள்கையோடு செயல்படுவது நல்லதற்கல்ல’ என்று வருத்தம் தெரிவித்தனர்.