உலகக் கோப்பை கால்பந்து போட்டி: ஈரானை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி 1- 0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு டி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான அணிகள் மோதின.
இரு அணிகளும் ஆரம்பம் முதல் நிதானமாக ஆடி வந்த நிலையில் இரு அணிகளும் ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
இதன்பிறகு, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 54வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் டிகோ கோஸ்டா ஒரு கோல் அடித்தார். பின்னர், இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.இதனால், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம், அடுத்த சுற்றுக்கான ஆட்டத்தை உறுதி செய்துக் கொண்டது ஸ்பெயின்.