மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவு
மணிப்பூர் மாநிலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியான மணிப்பூர் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4 ஆகப் பதிவாகியுள்ளது. இன்று காலை 6.50 மணி அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மக்களுக்கான பாதிப்பு, பொருட்சேதம் குறித்த எந்தவொரு தகவல்களும் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மியான்மர் மாநிலத்தில் ஏற்பட்ட இரண்டாம் நிலநடுக்கம் ஆகும்.
மாநில நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருக்க முடுக்கிவிடப்பட்டுள்ளனர். மியான்மர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நில அதிர்வு உணரப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு முறை மியான்மரில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆர்ய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.