சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
இன்று புது டெல்லியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தியை கமல்ஹாசன் சந்தித்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று டெல்ல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்தார். இதன் பின்னர் இன்று காலை 11 மணி அளவில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்திலேயே கமல்ஹாசன் சந்தித்தார்.
தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து சோனியா காந்தி உடன் கலந்து ஆலோசித்ததாக கமல் தெரிவித்தார். மேலும் அவர் சோனியாவின் மகள் பிரியங்கா வதேராவையும் சந்தித்ததாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மையத்தைத் தொடங்கியதாக அறிவித்த கமல்ஹாசன் நேற்று டெல்லியில் உள்ள தேசிய தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.