சிறுமி கடத்தல்... பெண் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு...?
மாணவி கடத்தலில் தொடர்பு இருப்பதாகக் கூறி மண்ணச்சநல்லூர் தொகுதி பெண் எம்.எல்.ஏவை சிறுமியின் உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த இனாம்கல்பாளையத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி, கடத்தப்பட்டுவிட்டதாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்அடிப்படையில் சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடத்தலில் ஆளும் கட்சி பெண் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அவரது அலுவலகத்தை சிறுமியின் உறவினர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குற்றச்சாட்டை மறுத்த எம்.எல்.ஏ, உடனடியாக சிறுமியை மீட்க காவல்துறையிடம் வலியுறுத்தினார்.
அதன்படி சிறுமியை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் ராஜசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி திருச்சியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.