19 ஆண்டுகளுக்கு பிறகு மின் இணைப்பு கட்டணம் உயர்கிறது

தமிழ்நாட்டில் அவ்வப்போது மின்சார கட்டணம் உயர்த்தி வருகிறது தமிழ்நாடு மின்சார வாரியம். தமிழ்நாட்டில் சுமார் 3 கோடிக்கும் அதிகமான மின்சார இணைப்புகள் உள்ளன. அதில் தனி வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், குடிசை வீடுகள் அடங்கும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அறிவித்த, முதல் 100 யூனிட் இலவசம் என்ற வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றியது. அவ்வப்போது மின்சார கட்டணங்களை ஸ்லாப் என்ற முறையில் உயர்த்தி வருகிறது. அதன்படி, தற்போது புதியதாக மின்சார இணைப்பு பெறுவதற்கு தனி வீடு, தொழிற்சாலை என சில பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் கட்டணத்தை சுமார் 5 மடங்கு உயர்த்தப்படவுள்ளது.

அதாவது வீடுகளுக்கான ஒருமுனை மின்சார இணைப்பு (புதிது) பெற ரூ.1600 என இருந்த கட்டணம் இனி ரூ.9800 ஆக அதிகரித்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மும்முனை மின்சார இணைப்புக்கு இதுவரை ரூ.7475 வசூலிக்கப்பட்டு வந்தது. அது இனி 35 ஆயிரம் ரூபாயாக வசூலிக்கபடும். அதே வேளையில் கிராமப்புறங்களில் 18 ஆயிரம் ரூபாயாக வசூலிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலை, வர்த்தக மின் இணைப்புகளுக்கும் அதற்கேற்றார் போல் புதிய மின் இணைப்பு பெற கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

மேலும், மின் கட்டணத்திற்காக நுகர்வோர் கொடுக்கும் காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பினால் அதற்கென வசூலிக்கப்படும் அபராத தொகையை உயர்த்தப்படும்.

இதனை அமல் படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பட்டியலை சமர்ப்பித்துள்ளது மின்சார வாரியம். ஆணையம் ஒப்புதல் வழங்கியதும் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வரும். சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கட்டண உயர்வுக்கு மின்சார வாரியம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மின்சார வாரியம்.

More News >>