ஆடிக்கு நிகரான கூப்பே! மெரிசிடிஸ் கூப்பே!

இந்தியாவில் கார் அமைப்புகளைப் பொறுத்தவரையில் செடான் ரகங்கள் தான். எப்போதாவது கேப்ரியோலட் ரகங்கள் அமையும். ஆனால், இந்த வரிசையில் வராதது கூப்பே வகைகள் தான்.

காரனம், கேப்ரியோலெட் ரகங்களே கூப்பேவின் அத்தனை அம்சங்களையும் அளித்துவிடும் என்பதால் தான். ஆனால், உலக அளவில் மட்டுமல்லாது இந்தியாவிலும் கூட கார் பிரியர்கள் மேல்புற ஃபேப்ரிக் அமைப்புக்காகவே வெறுக்கும் முக்கிய ரகம் இந்த கேப்ரியோலெட் ரகம். இந்த சூழலில் தான் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் கூப்பே ரக காரை இந்திய சந்தையில் கட்டவிழ்த்துவிட தயாராக நிற்கிறது.

இந்தியாவில் விற்பனை ஆகும் இரு பக்க கதவு செடான் ரகங்களில் இருந்து முற்ற்லும் மாறுபட்டதாக உள்ளது சி-க்ளாஸ் கூப்பே. கீழிறங்கிய மற்றும் கூடுதல் ஆர்பரிப்புடனான விண்ட் ஸ்கிரீன், செடான் அமைப்பைத் தோற்கடிப்பதாக உள்ளது. முழு எல்இடி முகப்பு விளக்குகள் தான் சி-க்ளாஸ் கூப்பேவின் மேம்படுத்திய தரம் ஆகும்.

சி300 ரகமும் இல்லாமல் ஏஎம்ஜி தோற்றத்துடன் ஏஎம்ஜி ரகமும் இல்லாத புது அறிமுகமாக இந்த கூப்பே இருக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் தற்கால புது அறிமுக அம்சங்களை வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதில் முன்னோடியாக உள்ளது. ஆனால், ஆடி கார் ரகங்கள் மெர்சிடிஸ் கூப்பேவுக்கு போட்டியாக தான் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகவே உள்ளது.

உள்தோற்றத்திலும் நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய காரான சி43 கூபே 80 முதல் 85 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை ஆகும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

More News >>