நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் ராஜினாமா வாபஸ் பெற்றார்
By Nabil
நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலக ராஜினாமா கடிதம் அளித்தார்,அந்த கடிதத்தை வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பொன்வண்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் சங்கத்தில் அனைத்து வேலைகளையும் நாங்கள் பகிர்ந்துகொண்டு செய்தோம்.
அரசியல் சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தோம். இந்த நிலையில் விஷால் திடீர் என்று ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே எனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தேன்.
விஷால் போட்டியிடுவது அவரது தனிப்பட்ட உரிமை என்றாலும் அது வருத்தம் அளித்தது. தற்போது அவர் எதிலும் போட்டியிடவில்லை.
எனவே நான் தொடர்ந்து எனது பதவியில் நீடிக்க முடிவு செய்கிறேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி வேகமாக நடக்கிறது. முழு ஒத்துழைப்பை கொடுப்பேன். எனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுகிறேன். அனை வருடனும் இணைந்து செயல்படுவேன். இவ்வாறு பொன் வண்ணன் கூறினார்.