கர்நாடகாவுக்கு முதலில் நீர் தேவை: கறார் குமாரசாமி!
”கர்நாடகாவுக்கு தற்போது தண்ணீர் தேவை உள்ளது” என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
"காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை" என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். இதையடுத்து நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் ஆணையத்திற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்றைய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் குமாரசாமி, “கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது கர்நாடக விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, “தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை தமிழகத்திற்கு 177 டிஎம்சி நீர் வழங்குவதை கர்நாடக தடை செய்யாது ஜூன் மாதத்தில் நடுவர் மன்றம் குறிப்பிட்டதைவிட அதிகப்படியான நீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது” என முன்னாள் பிரதமர்ரும் மஜக-வின் மூத்தத் தலைவருமான தேவ கெளடா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.