கூட்டணி தான் இல்லை, ஜம்முவே இல்லை என்றில்லை: பாஜக பொதுச்செயலாளர்

”ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் கட்சிக் கூட்டணியில் இருந்து தான் விலகியிருக்கோமே தவிர ஜம்மு மக்களிடம் இருந்து அல்ல” எனக் கூறியுள்ளார் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் பதவி வகித்து வந்த மெகபூபா முக்தி பாஜக கூட்டணி விலகியதால் பதவியை ராஜினாமா செய்யும் நிலை உருவானது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து விதிமுறைகளில் அடிப்படையில் அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சிக்கு உத்தரவு பிறப்பித்தார் குடியரசுத் தலைவர். இதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலின்படி ஆளுநர் வோரா ஆறு மாத காலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பொறுப்பை ஏற்றுக்கொடுள்ளார்.

 

More News >>