கமகமக்கும் முட்டை பிரியாணி ரெசிபி...
பிரியாணி பிரியர்களுக்கான சூப்பர் ரெசிபி.. அவசரத்துக்கு சிக்கன், மட்டன் கிடைக்கலையா.. நோ பிராப்லம்.. அதற்கு நிகரான சுவையில் முட்டை பிரியாணி ரெசிபி இதோ..
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவுமுட்டை 5அரிசி 2 கப்வெங்காயம் 2தக்காளி 3இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன்கரம்மசாலா தூள் அரை டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்தயிர் கால் கப்தேங்காய் பால் கால் கப்உப்பு தேவைக்கேற்பஎண்ணெய் தேவைக்கேற்பநெய் 1 டீஸ்பூன்பட்டை 1கிராம்பு 2ஏலக்காய் 2
செய்முறை :
வெங்காயம், தக்காளியை வெட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள் மற்றும் மசாலாதூள் போட்டு கிளறி விடவும்.
அதனுடன் தேங்காய் பால், தயிர் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற கணக்கில் 4 கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைத்து அதன் பிறகு அரிசியை போடவும்.
10 நிமிடம் கழித்து அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி 2 விசில் வந்ததும் இறக்கி விடவும். கமகமக்கும் முட்டை பிரியாணி தயார்.