ரம்ஜான் பிரம்மாண்ட திருவிழாவில் வளைகுடா தமிழ் மன்ற தன்னார்வலர்கள்

அமெரிக்காவில் உள்ள பிரசித்திப்பெற்ற மசூதியில் நடைபெற்ற பிரம்மாண்ட ரம்ஜான் திருவிழாவில் வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் சமூக சேவையில் ஈடுப்பட்டனர்.

அமெரிக்காவில் புகழ்பெற்ற மசூதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு, இஸ்லாமியர்கள் சங்கம் சார்பில் கடந்த 15-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவில், வளைகுடா தமிழ் மன்றம் சார்பில் சுமார் 15 தன்னார்வலர்கள் கலந்துக் கொண்டு சமூக சேவையில் ஈடுபட்டனர்.

வளைகுடா தமிழ் மன்றம் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. கோவில், தேவாலயம், மசூதி என எம்மதமும் சம்மதம் என்ற நோக்கத்துடன் வளைகுடா தமிழ் மன்ற தொண்டர்கள் சமூக சேவை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த வாரம் நடைபெற்ற ரம்ஜான் திருவிழாவில் குழந்தைகளுக்கு தேவையான உதவி செய்தல், குழந்தைகளுக்கு பாப் கார்ன், பஞ்சு மிட்டாய், பலூன் போன்றவை செய்துக் கொடுத்தல், போக்குவரத்தை சீர்செய்தல் உள்ளிட்ட சேவைகளை செய்தனர்.

வளைகுடா பகுதியில் உள்ள தமிழ் மக்களை ஒன்றினைக்க ஜாதி, மதம் பேதமின்றி வளைகுடா தமிழ் மன்றம் தன்னார்வலர்கல தொண்டாற்றியது இஸ்லாமிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வளைகுடா தமிழ் மன்றத்தினர், “ரம்ஜான் திருவிழாவில் வருகை தந்த தங்களது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்தது பெருமையான தருணம்.

மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் சேவைப்புரிந்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் வளைகுடா தமிழ் மன்றம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

More News >>