இது வேற லெவல் தலைப்பு.. விஜய் 62வது படத்தின் பெயர் சர்கார்

விஜய்யின் 62வது படமாக உருவாகி வரும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

விஜயின் 62வது படத்தை தீபாவளிக்கு வெளிவரும் என முன்னரே தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பெயர் வைக்காமலே பாதி திரைப்படம் முடிந்த நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னரே அவரின் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று வேறலெவல் என ஒரு தலைப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் இன்று சரியாக 6 மணிக்கு விஜய் திரைப்படத்தின் பெயர் ரிலீஸ் செய்யப்பட்டது. சர்கார் (அரசாங்கம்) என இப்படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். அத்துடன்,பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு பிறந்தநாளை பரிசை கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

தற்போது உள்ள அரசியல் பற்றிய பல சமூக பிரச்சனைகளை இந்த படத்தில் கதைக்கேற்ப இணைத்து இருப்பதாகவும் இதன் காரணமாகவே படத்திற்கு சர்கார் என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் சர்கார் ஆஷ்டேக், போஸ்டர்களை பகிர்ந்தும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

சர்கார் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

More News >>