ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்-ரோஜா அழைப்பு
திருப்பதியில் வி.ஐ.பி. தரிசனத்தில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல ரஜினிகாந்த் புகழ் பெற மனதார வாழ்த்துகிறேன். ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரவேண்டும். விஷால் அரசியலுக்கு வரலாம். ஆனால் டைம் பாஸ் செய்வதற்காக விஷால் அரசியலுக்கு வரக்கூடாது.
திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனத்தில் முறைகேடுகள் நடக்கிறது. அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. முறைகேடுகளை தடுக்க வேண்டிய விஜிலன்ஸ் அதிகாரிகள் என்னை பேசக்கூடாது என்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.