விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சர்காரின் 2வது போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டரை இன்று அதிகாலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பெயர் வைக்காமலே விஜய் 62வது படம் என்ற பெயரில் படப்பிடிப்பு நடந்து வந்தது. பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் 21ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், நேற்று மாலை 6 மணியளவில், படத்தின் தலைப்பு சர்கார் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

மேலும், ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளிக்கும் வகையில் விஜய் பிறந்தநாளான இன்று சர்கார் படத்தின் 2வது போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால், படத்தின் பெயர் மற்றும் போஸ்டர்கள் ட்ரெண்டாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் சர்கார் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் நடிக்கின்றனர். கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

More News >>