குட்கா வழக்கு... உணவுத்துறை அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

குட்கா முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தடை செய்யப்பட்ட குட்கா தமிழகத்தில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதில், அமைச்சர், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் இருந்த ஆவணங்கள், முதல் கட்ட தகவல் அறிக்கை அனைத்தும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறை, சேவை வரித்துறை அலுவலகங்களில் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

அடுத்தக்கட்டமாக, தமிழ்நாடு உணவுபாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நடத்தியது. குட்கா வழக்கில் சிக்கிய மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார், குட்கா குடோனுக்கு அனுமதி வழங்கியது, ஆய்வு நடத்தியது யார்? என்பன போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்புத்துறையிடம் இருந்து முழு விவரங்களை சிபிஐ சேகரித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாதவ்ராவிடம் இருந்து, கைப்பற்றப்பட்ட பென்ட்ரைவில் உள்ள தகவலின் அடிப்படையில் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>