சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி

‘இப்படை வெல்லும்’ படத்திற்கு பிறகு உதயநிதி அடுத்ததாக பிரியதர்ஷன் இயக்கத்தில் 'நிமிர்' படத்தில் நடித்து வருகிறார்.  மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள இந்த படத்தில்  உதயநிதி ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.  இந்நிலையில், உதயநிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உதயநிதி தனது அடுத்த படத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. 
More News >>