டாய்லெட் பேப்பர் கொண்டு தயாரான மணப்பெண் உடை!

மணப்பெண் உடையை கழிவறையில் பயன்படுத்தும் டாய்லெட் பேப்பர் கொண்டு தயாரித்துள்ளனர்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்த ராய் க்ரூஸ் என்பவர் நியூயார்க் நகரில் நடந்த திருமண உடைகள் அலங்காரம் குறித்தான போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 14-ம் ஆண்டு டாய்லெட் பேப்பர் திருமண உடைப் போட்டியில் க்ரூஸ் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான பரிசை வென்றுள்ளார்.

இப்பரிசை வென்ற ராய் க்ரூஸுக்கு 10 ஆயிரம் டாலர்கள் பரிசாக வென்றுள்ளார். 51 வயதான இந்த ஆடை வடிவமைப்பாளர், வெளிநாடுகளில் திருமணங்களின் போது மணப்பெண்கள் அணியும் வெள்ளை நிற திருமண உடையை டாய்லெட் பேபர்கள் கொண்டு மட்டுமே வடிவமைத்துள்ளனர்.

இதற்காக அவர் 20 ரோல்கள் டாய்லெட் பேப்பர்களைப் பயன்படுத்தியுள்ளார். முன்னதாக பிலிப்பைன்ஸைப் பூர்விமாகக் கொண்ட க்ரூஸ் அமெரிக்கா வருவதற்கு முன்னர் காய்ந்த மலர்களைக் கோண்டும் சங்குகள் மூலமாகவும் ஆடைகளை வடிவமைத்து வந்துள்ளார்.

 

More News >>