பாலாவின் வர்மா வருமா ?
பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கவிருக்கும் படம் வர்மா. இப்படம் தெலுங்கில் பிரமாண்ட வெற்றியை பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் எந்த முதல் கட்ட வேலைகளும் நடக்காமல் இழுத்தடிக்கிறார் பாலா என்று விக்ரம் புலம்புகிறாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்திலும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், இன்னும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க யாரையும் கமிட் செய்யவில்லையாம், ஸ்ரேயா ஷர்மா, ஷாலினி பாண்டே என பல பெயர் அடிப்பட்டாலும் பாலா இன்னும் ஹீரோயினை கமிட் செய்யவில்லை என்பதே உண்மை.
மேலும், தொடர்ந்து ஹீரோயின் தேடல் நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது, டிசம்பர் இறுதியில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.