தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படபிடிப்பு மீண்டும் தொடக்கம்
By Nabil
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ''என்னை நோக்கி பாயும் தோட்டா'' வெளிவர உள்ளது. தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் நேற்று தொடங்கியுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களும் நேற்று வெளியானது. அதில் வடசென்னை படத்திற்காக தாடி வைத்திருந்த தனுஷ், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக கிளீன் ஷேவ் செய்துள்ளார். இந்த படப்பிடிப்புடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துவிடும் என்று தெரிகிறது. ‘தர்புகா’ சிவா இசையமைக்கும் இப்படத்திற்கு ஜோமோன் டி.ஜான் ஒளிப்பதிவு செய்கிறார்.