ஒருதலைப்பட்சமானது காவிரி மேலாண்மை வாரியம்: குமாரசாமி குற்றச்சாட்டு
காவிரி மேலாண்மை வாரியம் ஒரு தலைப்பட்சமாக அமைக்கப்பட்டுள்ளது என கர்நாடகா முதல்வர் குமாரசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
"காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை" என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். இதையடுத்து நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் ஆணையத்திற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்றைய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் குமாரசாமி, “கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது கர்நாடக விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன்” எனக் கூறியிருந்தார்.
ஆனால், மத்திய நீர் வளத் துறை நேற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து அதற்கு ஒரு தலைவரையும் தலைமை அலுவலகத்தையும் கூட அமைத்துவிட்டது. ஆனால், ”காவிரி மேலாண்மை ஆணையம் ஒருதலைபட்சமாக அமைக்கப்பட்டுள்ளது” என கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.