உலகக் கோப்பை கால்பந்து: ஸ்வீடனை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்வீடன மற்றும் ஜெர்மனிக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி ஜெர்மனி வெற்றிப் பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று எப் பிரிவில் இடம் பிடித்துள்ள ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின.

போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் முதல் பாதியின் ஸ்விடன் அணியின் ஒலா டொல்வானன் 32வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

ளுலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி, விறுவிறுப்பாக ஆடியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் மார்கோ ரூயஸ் ஒரு கோல் அடித்தார். அதன்பிறகு ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில், ஜெர்மனி அணியின் டோனி குருஸ் 95வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் 2&1 என்ற கோல் கணக்கில் தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஆட்டத்தின் முடிவில், ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம், ஜெர்மனி அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More News >>